சச்சினுடன் ஒப்பிட்ட ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் லாங்கர்!


                                 Photo: AFP
ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஸ்டீவ் ஸ்மித் குறித்தும் உலகக்கோப்பை தொடர் குறித்தும் பேசியுள்ளார்.

இன்னும் 10 நாள்களில் தொடங்க இருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர். இந்தமுறை டாப் 10 அணிகள் மட்டுமே மோதும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டியுமே அனல் பறக்கும் ரகமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற அனைத்துப் போட்டிகளும் முக்கியமானதாக இருக்கும்.

இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் மற்றும் வார்னர் மீது உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் விழுந்துள்ளது. ஒருவருட தடைக்குப் பின்னர் நேரடியாக உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருவரும் இடம் பிடித்துள்ளனர். இந்த வரவு ஆஸ்திரேலிய ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. குறிப்பாக வார்னரின் ஐபிஎல் ஃபார்மை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லாங்கர் நேற்று உலகக்கோப்பை தொடர்பாகப் பேசியுள்ளார். லாங்கர்,  ``ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இருக்கிறது. இங்கிலாந்து ஆடுகளங்களில் எங்களின் பந்துவீச்சு சற்று கவலை அளிப்பதாகத்தான் உள்ளது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்களில் எதிரணியைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். நாங்கள் இந்தியா மாதிரி ஆடுகிறோம். இங்கிலாந்து மாதிரி ஆடுகிறோம் என்பது போன்ற பல கமென்ட்கள் வருகிறது. உண்மையில் நாங்கள் ஆஸ்திரேலியா போன்றுதான் விளையாடுவோம். அதுதான் எங்களுக்குப் பெருமை. ஆஸ்திரேலியாவாக விளையாடித்தான் நாங்கள் உலகக்கோப்பைகளை வென்றிருக்கிறோம்” என்றார்.

மேலும் ஸ்மித் அணிக்குத் திரும்பியுள்ளது தொடர்பாகப் பேசிய அவர், ``நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஒரு மாஸ்டர் மாதரி அவர் ஆடினார். அவர் அணிக்குத் திரும்பியது மகிழ்ச்சியான விஷயம். அவர் எப்போதும் பேட்டிங் செய்வதை விரும்புவார்.

கடந்த வாரம் பிரிஸ்பேனில் அவர் சிறப்பாக விளையாடினார். அவரது ஷாட்டுகள் நம்ப முடியாதபடியாக இருந்தது. எனக்கு சச்சின் தெண்டுல்கர் பேட் செய்வதை பார்ப்பதுபோல் இருந்தது. ஸ்மித் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்” என்றார். நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 89 மற்றும் 91 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.