ராஜீவ் காந்தியின் 28ஆவது நினைவுநாள் அனுஷ்டிப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 ஆவது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.


டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல முக்கிய அரசியல்  தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இத்தாலியில் தன்னுடன் படித்த சோனியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இவர், தன் சகோதரரின் மறைவுக்கு பிறகு தன் தாயிற்கு உதவியாக அரசியலில் காலெடி எடுத்துவைத்தார்.

1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டு கொலைசெய்யப்பட்டப்பின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட இவர், இந்தியாவின் 6ஆவது பிரதமராக செயற்பட்டார். இவருடைய ஆட்சிக்காலத்தில்தான் இந்தியாவின் தொழிநுட்ப துறைகள் வளர்ச்சிகண்டது.

இந்நிலையில் 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருகைதந்த பொழுது மே மாதம் 21ஆம் திகதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் இந்தியா உட்பட உலக அரங்கில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்து. அத்துடன் குறித்த சம்பம் தொடர்பில் பேரறிவாளன் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு 27 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இவர்களின் விடுதலைக்குறித்து தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானமொன்றை கொண்டுவந்தார்.  அதன் மூலம் எழுவரின் விடுதலைக்கு வழியேற்படுத்திக்கொடுத்தார்.

இந்த தீர்மானத்தின் படி இவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும்  ஆளுநர் தொடர்ச்சியாக மௌனம் காத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.