ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மற்றுமொரு முகாம் கண்டுபிடிப்பு!

குருணாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 6 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பயிற்சி முகாம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குருணாகல் அலகொலதெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னந்தோப்பில் இந்த பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் பின்னர் அந்த தென்னந்தோப்பின் உரிமையாளர் உட்பட 3 சந்தேக நபர்கள் கடந்த மே மாதம் 9ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேக நபர் இந்த பயிற்சி முகாமின் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மூன்றாவது சந்தேக நபர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்த மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் அந்த பயிற்சி முகாமுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபரிடமிருந்து பெருமளவு காசோலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக வைத்தியசாலை ஊழியரின் வங்கி கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவரது கணக்கிற்கு பல சந்தர்ப்பங்களில் பல்வேறு இடங்களில் இருந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர்கள் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய கடந்த சனிக்கிழமை மாவத்துபொல, அலவத்துகொட பிரதேசத்தில் மேலும் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.