கல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர்.


பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தவ்ஹித் ஜமாத் பயங்கரவாத குழுவின் கல்முனை தலைவர் சியாமிடம் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய பாலமுனை பிரதேச கிணறு ஒன்றிலிருந்து 31 சிடிக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன் பின்னர் சியாம் வழங்கிய தகவல்களுக்கமைய கல்முனை பிரதேசத்தில் தவ்ஹித் ஜமாத் அமைப்பிற்கு தொடர்புடைய 4 பேர் பாதுகாப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சஹ்ரானின் ஹம்பாந்தோட்டை பயற்சி முகாமில் பயிற்சி பெற்று, சஹ்ரானின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்த தவ்ஹித் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சியாம் கடந்த மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். அத்துடன் அவர்கள் நிந்தவூர் பிரதேச வீட்டில் இருந்து வெளியேறிச் செல்லும் போது பாதுகாப்பு பிரிவினரை திசை திருப்பி உதவி செய்வதற்கும் சியாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அந்த இடத்தில் உயிரிழந்த மொஹமட் நியாஸ் என்பவர் அம்பாறை பிரதேசத்தில் உள்ள வீட்டை கொள்வனவு செய்வதற்கும் சியாம் உதவியுள்ளார்.

புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர்களிடம் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.