ஸ்டெர்லைட்: துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு உரிய நீதி கிடைக்கும்!!


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு திமுக ஆட்சியில் உரிய நீதி கிடைக்கும் என்று அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்கள் மீது ஈவு இரக்கமில்லாமல் கடந்த ஆண்டு மே 22-ஆம் தேதி கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு, தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்.
தற்போது இந்தத் துப்பாக்கிச் சூட்டையும், நடைபெற்ற அராஜகத்தையும் கண்டித்துக் கூட்டம் போடவும், உயிரிழந்த 13 பேருக்கு ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியைக்கூட நடத்த விடாமல் அதிமுக அரசு தடை போட்டு இருக்கிறது.

ஒருபக்கம் நினைவேந்தல் நிகழ்ச்சிக்குத் தடை, இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க மறுப்பு என்று எப்போதும் போல இரட்டை வேடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த ஏமாற்று நாடகத்தை தூத்துக்குடி மக்களும், தமிழக மக்களும் நீண்ட நாள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவோ பொறுத்துக் கொள்ளவோ மாட்டார்கள்.
மனிதநேயமற்ற முறையில், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நசுக்கும் வகையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிமுக அரசு பிற்போக்குத்தனமாக நடந்து கொள்வது கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும்.
அப்பாவிகளின் 13 உயிர்கள் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைவதையொட்டி துயரம் நிறைந்த அந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த ஆறுதலும், அனுதாபமும்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்கவும், அமைச்சரவையைக் கூட்டி ஒரு கொள்கை முடிவினை எடுத்து நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திமுக ஆட்சி அமைந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.