யாழ் தென்மராட்சியில் பொலிஸ், இராணுவம் குவிப்பு!பெரும் பதற்றம்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி சிமிழ் கண்ணகை அம்பாள் ஆலய பெருந் திருவிழா விவகாரத்தால், குழப்பமடைந்துள்ள மக்கள் பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, பெருமளவு படையினரும் பொலிஸாரும் பிரதேச செயலகம் முன்பாக குவிக்கப்பட்டுள்ளனர். கடுமையான சோதனையின் பின்னர் பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பேருந்தில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்திருந்த மக்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். பிரதேச செயலகத்துக்கு வெளியே பதாகைகளை ஏந்திய வண்ணம் மக்கள் சிறிது நேரம் நின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது
Powered by Blogger.