பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு!!

இலங்கையின் வீதிகளுக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே பெயரிடலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட வேண்டுமென அறிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் வீதிகளுக்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மட்டுமே பெயரிடப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தனவிற்கு இது குறித்து பிரதமர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

நாட்டின் ஒரு சில பகுதிகளில் வீதிகளுக்கு அரபு மொழியில் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


Powered by Blogger.