கல்கிஸ்சையில் ஆயுர்வேத நிலையங்கள் சுற்றிவளைப்பு!!

கல்கிஸ்சை பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிய இரண்டு இடங்களை சுற்றிவளைத்த பொலிஸார் 8 பெண்களையும் ஒரு ஆணையும் கைது செய்துள்ளனர்.


இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைதாகியவர்கள் மொரட்டுவை, மொரட்டுவெல்ல, கருவலகஸ்வெவ, கதிர்காமம், பாதுக்கை, சாலியவெவ மற்றும் பண்டாரவளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட ஆண் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.