கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்!!

தமிழகத்தில் கோடீஸ்வர தம்பதியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தில், அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது.


மதுரையில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த வேங்கட சுப்ரமணியன் (41) என்பவரும் மீனாட்சி (33) என்ற பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

ஓன்லைனில் தொழில் செய்து வந்த இந்த தம்பதி கோடீஸ்வரர்களாக இருந்தனர். அதில் வந்த பணத்தை பல வகையில் முதலீடு செய்தனர்.

திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத சோகம் இவர்களை வாட்டி எடுத்தாலும், மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர்.

இவர்களின் வாழ்க்கையில் ரம்மி வடிவில் வந்தது எமன். ஓன்லைன் ரம்மி விளையாட்டில் தம்பதியர் இருவருமே ஆர்வம் காட்டி வந்தனர். இதன்மூலம் நிறைய சம்பாதித்துள்ளனர். நாளடைவில் ரம்மி விளையாட்டில் நிறைய பணத்தை இழந்து கடனாளி ஆன நிலையில் காரை விற்றனர்.

இந்நிலையில் சில தினங்களாக வேங்கட சுப்ரமணியன், மீனாட்சி தம்பதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இருவரின் அழுகிய சடலங்களை கைப்பற்றினார்கள்.

இறப்பதற்கு முன்னர் அவர்கள் எழுதியிருந்த கடிதத்தில், தங்களின் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வேங்கட சுப்ரமணியனின் செல்போனில் இருந்து கடைசியாக பேசிய எண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.