ஆளுநர்கள் மீதும், அமைச்சர்கள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?!!

யாழ். பல்கலைக்கழகத்திலே படத்தை வைத்திருந்ததற்காக மாணவர்களை கைது செய்தீர்கள், ஆனால் குற்றம் சாட்டப்படுகின்ற ஆளுநர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நானும் ஒரு கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்.

இந்த தாக்குதலிலே என்னுடைய உறவினரை சேர்ந்த ஒரு பெண்மணியும், அவருடைய குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகளவான பச்சிளங்குழந்தைகள் பலியாக்கப்பட்டார்கள், பலர் உடல் கருகி இறந்தார்கள். காயமடைந்த குழந்தைகள் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்கள்.

இதனால் நாங்கள் தேவாலயத்திற்கு செல்ல முடியாத ஒரு நிலைமை இருக்கின்றது. அப்பாவி மக்கள் எங்களை பார்த்து நீங்களும் இதற்கு உடந்தையா? என கேட்கிறார்கள்.

இன்று முக்கியமான அமைச்சர்கள் மீதும் ஆளுநர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. மக்கள் எங்களை பார்த்து என்ன விசாரணை மேற்கொண்டீர்கள் என கேட்கிறார்கள்?

யாழ்.பல்கலைகழகத்திலே படத்தை வைத்திருந்ததற்காக கைது செய்தீர்கள். ஆனால் குற்றஞ்சாட்டப்படுகின்ற ஆளுநர்கள் மீதும், அமைச்சர்கள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

நீங்களும் சேர்ந்தா இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறீர்கள்? உடந்தைகளா இருக்கின்றீர்கள்? என எங்களை பார்த்து கேட்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.