ஐபிசி தொலைக்காட்சி வாழ்வாதார உதவி- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்பாக ஒளிபரப்பியது பொய்ச்செய்தி-பேர்லின் அம்மா உணவகம்!

குறிப்பிட்ட யோகராசா (இசைக்குயில்)எனும் முன்னாள் போராளிக்கு  அம்மா உணவகத்தால் சங்கர் என்பவர் தர்மலிங்கம் சுரேஸ் என்பவரூடாக ரூபா 100,000   கொடுப்பதற்காக ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
இந்த எற்பாடுகள் நடந்துகொண்டிருக்கையில் குறிப்பிட்ட முன்னாள் போராளியாகிய யோகராசா(இசைக்குயில்) என்பவருக்கு நோர்வேயில் வாழ்கின்ற ஒரு புலம்பெயர் உறவின்  வேண்டுதலின் பெயரில் புதூரைச்சேர்ந்த மணிமோகன்  (0776957978) என்பவரூடாக 03 மாடுகள் வாங்கி கொடுக்கப்பட்ட செய்தி கிடைக்கப்பெற்ற பின்னர் ஆதாரப்பூர்வமாக அச்செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஏற்கனவே வாழ்வாதார உதவி குறிப்பிட்ட முன்னாள் போராளியான யோகராசா (இசைக்குயில்) என்பவருக்கு கிடைத்திருந்த காரணத்தால்
இவருக்காக அம்மா உணவகத்தால்  ஒதுக்கப்பட்டிருந்த ரூ 100,000 நிறுத்தப்பட்டது.

இது இவ்வாறு இருக்க யோகராசா(இசைக்குயில்) என்பவருக்காக ஒதுக்கப்பட்டிருந்து ரூ 100,000 நிதி  இன்னுமோர் போராளிக்கு  வழங்குமாறு எம்மால்   பணிக்கப்பட்டது.
அதற்கமைய தர்மலிங்கம் சுரேஸ் என்பவரால் அவ்வாறே  செய்து முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திரு சுரேஷ் தர்மலிங்கம் அவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பேர்லின் அம்மா உணவகத்தின் வாழ்வாதார உதவிகளை கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக ஒருங்கிணைத்து வருகின்றார். இவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளராகவும் , அதேசமையம் ஒரு ஆசிரியராகவும் பல தடைகளையும் தாண்டி எமது வேண்டுதலுக்கு அமைய அனைத்து செயற்பாடுகளையும் இரவுபகல் பாராது செய்துவருகின்றார்.உதவித் திட்டங்களின்  எமக்கான கணக்கறிக்கை அன்று முதல் இன்று வரை திரு சுரேஷ் அவர்கள் நேர்த்தியாக செய்து வருகின்றார்.

இந்நிலையில் குறிப்பிட்ட யோகராசா (இசைக்குயில்)எனும் பயனாளி IBC தொலைக்காட்சி ஊடாக திரு தர்மலிங்கம் சுரேஷ் மீதும் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீதும் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றுமுழுதான பொய் என்பதை பேர்லின் அம்மா  உணவகம் ஆகிய நாம் இத்துடன் உறுதிப்படுத்துகின்றோம். அத்தோடு ஐபிசி தொலைக்காட்சியும்  இந்த குற்றச்சாட்டை  சரியான முறையில் மீளாய்வு செய்யாமல் பொய்யான செய்தியை ஒளிபரப்பி தாயகத்தில் தளராத கொள்கையுடன் மக்கள் மீது அக்கறையுடனும் செயற்படும்  திரு சுரேஷ் தர்மலிங்கம் மீதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீதும்   கலங்கத்தை ஏற்படுத்தியது கண்டிக்கத்தக்கது. பேர்லின் அம்மா உணவகம் கடந்த ஆண்டுகளாக தாயகத்தில் பல்வேறு சுயதொழில் ஊக்குவிப்பு / சிறுவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள்/ இயற்கை அனர்த்தம்  போன்ற உதவிகள் அனைத்தையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
ஊடாகவே நம்பிக்கையுடன் செய்து வருகின்றது.

பேர்லின் அம்மா உணவகம்
ஒருங்கிணைப்பு
சங்கர் (யேர்மனி )
017621751446
Powered by Blogger.