நாளை மதுக் கடைகள் மூடல்: தேர்தல் ஆணையம் உத்தரவு!!


வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்து முடிந்தது. அதே போல, 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம், தமிழகம் முழுவதும் மதுக் கடைகளை மூடப்படும் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.