இழுபறியில் இந்திய தேர்தல் முடிவுகள்!!

தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்ந்து இழுபறி நிலையிலே இருக்கிறது. அமமுக இன்னும் தனது கணக்கை தொடங்கவில்லை,


தி.மு.க - 11

அ.தி.மு.க - 11

அவரக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னணியில் உள்ளார்.  திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 10,297 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.

செந்தில் பாலாஜி

விளாத்திகுளம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் 5 சுற்றுகளில்  வாக்குகள் விபரம்:


அதிமுக வேட்பாளர் பி. சின்னப்பன்  8153 வாக்குகள் முன்னிலை

1. பி. சின்னப்பன் (அதிமுக)- 18865

2. ஏ.சி. ஜெயக்குமார் (திமுக)- 10612

3. மார்க்கண்டேயன் (சுயேச்சை)- 8275

4. ஜோதிமணி (அ.ம.மு.க) - 2,104

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க கடும் போட்டி அளித்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக முன்னிலை வகித்தாலும். இடைத் தேர்தல் முடிவுகளில் அ.தி.மு.க கடும் போட்டி அளித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி தி.மு.க 11 இடங்களிலும் அ.தி.மு.க 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது,

 ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் முதல் சுற்று நிலவரப்படி அதிமுக - 3970 வாக்குகளும் தி மு க -  3969 வாக்குகளும் அமமுக -  1185 வாக்குகளும் பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் லோகிராஜன் தன் சகோதரரான திமுக வேட்பாளர் மகாராஜனை விட ஒரு ஓட்டு அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குகள் எண்ணப்படும் போது, முதல் மேசையில் வைக்கப்பட்ட இயந்திரத்தின் எண்ணும், கட்சி முகவர்களின் கையிலிருந்த இயந்திரத்தின் எண்ணும் வேறுபாடு உள்ளது. மேலும், அதில் உள்ள கட்சி முகவர்களின் கையெழுத்தும் வேறுபடுகிறது. இதனை அ.ம.மு.க முகவர்கள் கண்டுபிடித்து, எந்திரத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மொத்தமுள்ள 14 மேசைகளில் ஒரு மேசை மட்டும் எண்ணப்படாததால், முதல் சுற்று இன்னும் முடியாமல் உள்ளது. வாக்குப் பதிவு எந்திரத்தை மாற்ற முயற்சியா என  எதிர்க்கட்சியினர் சந்தேகம் கிளப்புகின்றனர்.

தற்போதய நிலவரங்கள்படி தமிழகத்தில் வெளியான முன்னிலை நிலவரங்களில் தி.மு.க 8 இடங்களிலும் அ.தி.மு.க 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
 சாத்தூர் இடைத்தேர்தல் முதல் சுற்று நிலவரம் : ராஜவர்மன் (அதிமுக)- 3385, சீனிவாசகன் (திமுக)- 3349,  எஸ்.ஜி.சுப்பிரமணியன் (அமமுக)- 728

அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலையில் உள்ளார்.

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஆகிய இரண்டிலும் தி.மு.க முன்னிலையில் உள்ளது. அதேபோல்  ஆண்டிப்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில்  அ.தி.மு.க 2766 வாக்குகளும், தி.மு.க 5407 வாக்குகளும் பெற்றுள்ளது. 2641 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலையில் உள்ளது.

காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு எந்திரம் எண் 31 உடைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே வேட்பாளர் ஹெச்.ராஜா, தேர்போகி பாண்டி ஆகியோர் அந்த வாக்கு பெட்டியைப் பார்வையிட்டார்கள். சர்ச்சைக்குரிய வாக்கு எந்திரத்தை எண்ணும் போது  ஒப்புகை சீட்டு பெட்டியையும் சேர்த்து எண்ண வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் வேட்பாளர்கள்.

ஏப்ரல் 11 முதல் மே- 19 ம் தேதி வரை இந்தியாவின் 17 வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் வாக்குப்பதிவு நடந்த 542 மக்களவை தொகுதிக்கும் மொத்தமாகச் சேர்த்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கு மொத்தமுள்ள 39  மக்களவை தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. அதனுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. 8:30 மணி முதல் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 45 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், மற்றும் நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 306 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு வேட்பாளருக்கும் 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூர்மையாக உள்ள பேனா, கத்தி போன்றவை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. முகவர்களுக்குத் தேவையான அனைத்தும் மையத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் தான் கிடைக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் நடக்காததைத் தடுத்த தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.