புதிய வடிவில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிப்பு!!

தமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்பட்டுவரும் தொல்பொருள் திணைக்களம் தற்போது திருகோணமலையை இலக்கு வைத்திருப்பதாக வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசர ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.


அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், தொல்பொருள் திணைக்களம் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழர் பிரதேசங்களை சிங்கள, பௌத்த இடங்களாக காட்டும் முயற்சியாகவே இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவரிசையில் தற்போது திருகோணமலை இலக்கு வைக்கப்பட்டு, தமிழர்களின் வாழ்விட ஆதாரங்களை அழித்து ஆக்கிரமிக்கும் செயற்பாடு தீவிரம் பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.