தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்!

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் தீர்மானமாக வெற்றி தோல்வி நிலவரத்தைக் காட்டுகின்றன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான வெற்றியைப் பதிவு செய்யும் நிலையில் உள்ளது.


தமிழகத்தில் இரவு 10.30 மணி நிலவரப்படி 15 தொகுதிகளுக்கு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒன்பதில் திமுகவும், மூன்றில் காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வென்றுள்ளனர்

ஒட்டுமொத்தமாக 38 மக்களவை தொகுதிகளில் அதிமுக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 13-ல் வெற்றியும் 24-ல் முன்னிலையிலும் உள்ளது.

சிதம்பரம் தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.எந்தெந்த தொகுதிகளில் யார் வெற்றி/ முன்னிலை என்ற விவரங்கள் இங்கே.

அரக்கோணம் - எஸ்.ஜெகத் ரட்சகன் (திமுக)
ஆரணி - எம் கே விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)
மத்திய சென்னை - தயாநிதி மாறன் (திமுக)
வட சென்னை - கலாநிதி வீராசாமி (திமுக)
தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)
சிதம்பரம் - திருமாவளவன் (விசிக )
கோயம்புத்தூர் - பி.ஆர். நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
கடலூர் - டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் (திமுக)
தருமபுரி - செந்தில் குமார் (திமுக)
திண்டுக்கல் - வேலுசாமி (திமுக)
ஈரோடு - அ.கணேசமூர்த்தி (மதிமுக - திமுக சின்னம் )
கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி (திமுக)
காஞ்சிபுரம் - ஜி.செல்வம் (திமுக)
கன்னியாகுமரி - ஹெச். வசந்த குமார் (காங்கிரஸ்)
கரூர் - ஜோதிமணி (காங்கிரஸ்)
கிருஷ்ணகிரி - டாக்டர் ஏ. செல்லகுமார் (காங்கிரஸ்)
மதுரை - சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
மயிலாடுதுறை - எஸ். ராமலிங்கம் (திமுக)
நாகப்பட்டினம் - எம்.செலவராஜ் (இந்திய கம்யூனிஸ்ட்)
நாமக்கல் - ஏ.கே.பி. சின்ராசு (கொமுதேக - திமுக சின்னம் )
நீலகிரி - ஆ.ராசா (திமுக)
பெரம்பலூர் - டி.ஆர். பச்சமுத்து (ஐ.ஜே.கே - திமுக சின்னம் )
பொள்ளாச்சி - சண்முக சுந்தரம் (திமுக)
ராமநாதபுரம் - நாவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் )
சேலம் - எஸ்.ஆர். பார்த்திபன் (திமுக)
சிவகங்கை - கார்த்தி சிதம்பம் (காங்கிரஸ்)
ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு (திமுக)
தென்காசி - தனுஷ் எம்.குமார் (திமுக)
தஞ்சாவூர் - எஸ்.எஸ். பழனி மாணிக்கம் (திமுக)
தேனி - ரவீந்திர நாத் குமார் (அதிமுக)
திருவள்ளூர் - கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்)
தூத்துக்குடி - கனிமொழி (திமுக)
திருச்சி - திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)
திருநெல்வேலி - ஞானதிரவியம் (திமுக)
திருப்பூர் - சுப்பராயன் - (இந்திய கம்யூனிஸ்ட்)
திருவண்ணாமலை - அண்ணாதுரை சி.என் (திமுக)
விழுப்புரம் - டி.ரவிக்குமார் ( விசிக - திமுக சின்னம் )
விருதுநகர் - மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.