இந்தியாவில் தொழிலை நிறுத்தும் சோனி!

சோனி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தொழிலுக்கு இந்தியாவின் பங்கு இன்றியமையாதது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கெனிசிரோ யோஷிடா தெரிவித்துள்ளார்.
ஆனால், இழப்புகள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையை நிறுத்த வேண்டுமென முதலீட்டாளர்கள் வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் ஸ்மார்ட்போன் தொழிலால் சோனி நிறுவனத்துக்கு 879.45 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சோனி பின்தங்கியுள்ளது.
இதுகுறித்து கெனிசிரோ யோஷிடா நேற்று (மே 22) செய்தியாளர்களிடம் பேசுகையில், “சோனி நிறுவனத்தின் தொழில், பொழுதுபோக்கை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற தினசரி பயன்பட்டு பொருட்களில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. ஸ்மார்ட்போன்களை பொழுதுபோக்கிற்கான கருவியாகவே நாங்கள் பார்க்கிறோம். எங்களது நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சியைக் கணக்கில் கொண்டால் ஸ்மார்ட்போன்கள் மிக அவசியம். இளம் தலைமுறையினர் தொலைக்காட்சிகளைப் பார்ப்பதே இல்லை. அவர்களது முதல் தேடல் ஸ்மார்ட்போன்களாகவே உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த நிதியாண்டில் தொழிலை லாபகரமாக நடத்த சோனி முயற்சி செய்து வருகிறது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஆலையில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது சோனி. மேலும், உலகளவில் பல இடங்களில் விற்பனையை விரிவுபடுத்தியுள்ளது. ஜப்பான், ஐரோப்பியா, தைவான், ஹாங் காங் ஆகிய பகுதிகளில் கவனத்தை அதிகரிக்கவுள்ளதாக சோனி பட்டியல் வெளியிட்டுள்ளது. மேலும் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, மெக்ஸிகோ, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் கவனத்தைக் குறைத்து இச்சந்தைகளிலிருந்து தொழிலை நிறுத்திக்கொள்ள சோனி திட்டமிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை