சுற்றலாத்துறையின் மூலம் இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும்.!!

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைகளை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க சுற்றுலாத்துறையினை வளர்க்க வேண்டுமென தமிழர் முன்னேற்றக் கழகத்தின் பிரதம அமைப்பாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளருமான விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி  இந்த நாட்டினை பல்வேறு வகையில் பின்னோக்கி தள்ளியுள்ளது. இன்று நாங்கள் முன்னொருபோதும்  இல்லாதவாறு ஏதோ ஒரு பயம் கலந்த எதிர்காலத்தில் பற்றில்லாதவர்வகள் போல இருக்கின்றோம்.

இந்த நாட்டின் சுற்றுலாத்துறை மிக மோசமாக பாதிப்படைந்தது உள்ளதாக கவலை அடைகின்றோம். உண்மை தான் ஆனால் இதற்கு முன்பு இந்த நாட்டின் சுற்றுலாத்துறை காத்திரமானதாக இருந்ததா? சரியாக யோசித்தால் இல்லை என்று தான் கூற வேண்டும். இயற்கையாகவே சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வளங்கள் இந்த நாட்டில் கொட்டிக்கிடந்தும் எம்மிடம் ஒரு பிரமாண்டத்திட்டம் ஏதும் இல்லை. மலேசிய போன்ற நாடுகள் பத்து மில்லியனுக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஆண்டு ஒன்றுக்கு கவரக்கூடிய வகையில் தனது செயற்பாடுகளை கையாள ஆரம்பித்த விளைவே இன்று அந்த நாடு மிகப் பாரிய வளர்ச்சியை இலகுவில் அடைந்து வருகிறது எனலாம்.

இந்த சுற்றுலாத்துறை வெறுமனவே வருமானத்தினை மாத்திரம் தருமா என்றால் நான் இல்லை என்று தான் கூறுவேன். இலங்கை போன்ற நாடுகளில் உள்ள பல் வேறு சமூக பிரச்சனைகளுக்கும் இது தீர்வு தரும். சற்று தேடிப்பாருங்கள், உலகில் சுற்றலுலாத்துறை அதிகம் மக்கள் மயப்படுத்தப்பட்ட நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளும் இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலைமைகளும் மிக மிக குறைவு.

இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு மிகப் பிரதான இடம் கொடுத்து இலங்கையில் சகல இடங்களிலும் சுற்றுலா வலயங்கள் அமைக்க வேண்டும். அங்குள்ள மக்களை சுற்றலாத்துறையின் அங்கங்களாக இணைத்து இச் சுற்றுலாத்துறையினை மக்கள்மயப்படுத்த வேண்டும். இதனால் அம் மக்கள்  சுற்றுலாத்துறையில் பங்குபற்றி அதில் தங்கி வாழ ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் இத்துறை பாதிப்பு அடைவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். அதனூடாக நாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த தருணத்திற்கும் இடம் கொடுக்கமாட்டார்கள். அதேவேளை தனிநபர் வருமானமும் கணிசமாக அதிகரிக்கும்.

இலங்கையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மைக்கு காரணம் பல்வேறு பிரதேசங்களில் ஒரு இனம் மாத்திரம் செறிந்துள்ளது. அவ்வினம் மற்றைய இனங்களுடன் வாழும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளார்கள். இதனால் ஒரு கிணற்றுத் தவளை போல் வாழ்வதால் மற்றைய இனங்கள் தொடர்பாக சரியான புரிதல் அற்று உள்ளனர். கலவரங்களில் கூட பல இனங்கள் ஒன்றாக இருந்த மக்கள் அதில் ஈடுபடுவதில்லை, ஆனால் வெளிப்பிரதேசத்தில் இருந்து வந்தவர்களே அழிவுகளை செய்வதை காணக்கூடியதாக இருக்கும்.
ஆனால் இந்த சுற்றுலாத்துறையில் பல்வேறு நாடுகளில் இருந்து உல்லாசப் பயணிகள் வருவதால் பல்வேறு இனங்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். இது மற்ற இனங்களை மதிக்கும் மற்றும் புரிந்துக்கொள்ளும் நிலையை நாடுபூரகவும் இருக்கும் மக்களுக்கு ஏற்படுத்தும்.

அது மாத்திரம் இல்லாமல் மற்றைய நாட்டு பிரைஜைகள் எமது நாட்டினை வந்து பார்த்து நேசிப்பதையும் அதன் அழகினை கண்டு மயங்குவதையும் பார்த்து இலங்கையர்களுக்கும் எமது நாட்டின் மீது உள்ள ஈர்ப்பு மிக வேகமாக அதிகரிக்கும் இதனால் இனங்களுக்கு இடையிலான பாகுபாடுகள் மறைந்து நாம் எல்லோரும் இலங்கையர் என்பதனை பொருமையுடன் சொல்லக்கூடிய காலம் உருவாகும்.

இதற்கு இந் நாட்டு சுற்றுலாத்துறையின் மிக மிக பிரம்மாண்டமான இலக்குடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்று முழு இலங்கையையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். இது முழுமையாக பெரும்பாலான இலங்கையர்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
Powered by Blogger.