தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் [ 24.5.1981 ]

பணத்தை மறந்து இனத்தை நேசித்த அந்த சிறுத்தை கருத்தைப் பரப்ப உலகத் தமிழினம் முன் வரவேண்டும் .

பொய்யாய் தமிழ் பற்றாய் நம் ஐயா இடத்தை நிரப்ப வேண்டும் .
உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு என்று முதன் முதலில் உறுமியவர் .
செத்தையில் செத்துக்கிடந்த செம்மொழியை அரச-மெத்தை ஏற்றப் படாத பாடுபட்டவர் .

ஈழத்தமிழர் குருதியும், தமிழகத் தமிழர் குருதியும் ஒன்றே !!
" தாய் மொழியே ஒரு தேசிய இனத்தின் உயிர் மூச்சு ! "  நாம் தமிழர் !! நாம் தமிழர் !!  எனும் முழக்கம் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தேவை , தமிழ் நாடு - தமிழீழ நாடு தமிழர்களின் இரு நாடுகள் என்று முழங்கி தூய தமிழ் வளர்ச்சிக்காய் துடித்தவர் .
தமிழுக்காய் துடித்த தூய இதயம் ! எம்மொழி காக்க எரிமலையாய் வெடித்து எழுந்து நின்ற கேடயம் ! வேற்று மொழிக் கலப்படம் தமிழில் வராது காத்த காவல்  அரண்  எங்களுடைய ஐயா இன்று உயிரோடு எம்முடன் இல்லை ...........
................
நம் ஐயா இல்லாவிட்டால் என்ன ??? ... அதற்குதான் உலகம் பூராக  நாங்கள் எல்லோரும் இருக்கின்றோமே !!!!!
Powered by Blogger.