பொள்ளாச்சி: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ.


கடந்த பிப்ரவரி மாதம் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்ததாகப் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஒரு இளம்பெண். இந்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர், பாலியல் புகார் தொடர்பான வழக்கு மற்றும் புகார் அளித்தவரின் சகோதரரைத் தாக்கிய வழக்கு ஆகியன சிபிசிஐடி தனிப்படை வசம் ஒப்படைக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், மார்ச் 13ஆம் தேதியன்று இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு. புகார் அளித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கில் சரணடைந்த மணிவண்ணன் என்பவரது பெயர், பாலியல் புகார் வழக்கில் சேர்க்கப்பட்டது.

கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் இவ்வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியது. சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களும் சிபிஐ அதிகாரிகளால் பெறப்பட்டன. பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் வீடுகளில் சோதனை செய்தனர் சிபிஐ அதிகாரிகள்.

இந்த நிலையில், இன்று (மே 24) பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் உட்பட 5 பேர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.