நட்சத்திர வேட்பாளர்களின் நிலை!

மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதுமுள்ள சினிமா பிரபலங்கள் கட்சி சார்பிலும் சுயேச்சையாகவும் போட்டியிட்டு மக்கள் ஆதரவை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பிரச்சாரத்தின் போது கவனம் ஈர்த்த அவர்களால் வாக்குகளைப் பெறமுடியவில்லை.


அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை போலவே, சினிமா பிரபலங்கள் போட்டியிட்ட தொகுதிகளும் மீடியா மற்றும் மக்கள் கவனத்தை ஈர்த்து வந்தன. கத்திரி வெயில், அரசியல் வேட்பாளர்களின் பிரச்சாரமென சோர்வுற்ற வாக்காளர் வெகுஜனம், நட்சத்திரங்களின் வருகையால் தேர்தல் களத்தில் உற்சாகமடைந்து ரிலாக்ஸ் ஆகினர்.

குறிப்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தின் போது அதிரடியாக மீன் விற்றது, அம்மிக்கல்லில் சட்னி அரைத்தது, புரோட்டா போட்டது, சைக்கிளில் வலம் வந்தது. தெருவில் கிடக்கும் குப்பையை அள்ளியது என தினுசாக தனது பிரச்சாரத்தை கையாண்டார். நேற்று வெளியான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் 34,434 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார்.

பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உடனடி கவனத்தை ஈர்த்த இவர், கமலஹாசனின் கட்சியிலேயே சேர்ந்து தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார். எச். ராஜா கார்த்திக் சிதம்பரம் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் ஐந்தாவது இடத்தைப் பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 22931.

தென் சென்னை பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் 670 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

சுயேச்சையாக போடியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்டார். 28906 வாக்குகள் பெற்று அத்தொகுதியில் 14ஆவது இடத்தையே பிடிக்க முடிந்தது. ‘என் முகத்தில் விழுந்த பளார் அறை’ என தோல்விக்குப் பின் டிவிட் போட்டு ஆறுதல் தேடிக்கொள்ள மட்டுமே முடிந்தது.

மும்பை தென் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகிய ஊர்மிளா மடோண்ட்கர் 2,41, 431 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். அசன்லால் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸில் போட்டியிட்ட மூன்மூன் சென் 4,35,741 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை கைப்பற்றினார்.

பிம்பங்கள் மீது உடனடி கவனத்தை மக்கள் வழங்கினாலும், வாக்கில் தங்களுக்கான வேட்பாளர் யாரென்பதில் மக்கள் மாற்றுக் கருத்து கொண்டுள்ளனர். கர்நாடகாவில் பிரகாஷ் ராஜின் பிரச்சாரம் சாமானிய மக்களிடம் கவனத்தைப் பெறவில்லை. ஆனால் அதே சமயம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மறைந்த அம்பரிஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா சுயேச்சையாக நின்று 7,03,660 வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை பெற்றுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.