அருண் விஜய்க்கு வில்லனாகும் பிரசன்னா!!

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பிரசன்னா இணைந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு பரவலான கவனம் பெற்றது. மார்ச் மாதம் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான தடம் திரைப்படம் அருண் விஜய் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது.


தற்போது அருண் விஜய் பாக்ஸர் படத்தில் ரித்திகா சிங்கிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அதற்கான பயிற்சிக்காக வியட்நாமில் முகாமிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் விவேக் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

த்ரில்லர் படங்கள் அருண் விஜய்க்கு கைகொடுத்துவரும் நிலையில் அருண் விஜய் சில மாதங்களுக்கு முன் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமானார். இந்தப் படத்தை லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு பிரசன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

பிரசன்னா முதன்முறையாக தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துவருகிறார். பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரவம் என்ற வெப்சீரிஸில் பிரசன்னா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடரில் நடிகை இந்துஜா நடித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.