கைது செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவரிடம் தீவிர விசாரணை!!

தற்கொலைதாரியுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


பொலிஸாரை மேற்கொள்காட்டி கொழும்பு ஊடம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலைக் குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார் எனத் தெரிவித்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்கொலைக் குண்டுதாரியின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டபோது கிடைத்த தகவலுக்கு அமைய இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மற்றும் தற்கொலைக் குண்டுதாரி இன்ஷாப் அஹமட் ஆகியோருக்கிடையில் கையடக்கத் தொலைபேசி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனிடையே, “பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்குள் குண்டுகளை வைத்துவிட்டோம்” என்று எழுதப்பட்ட அநாமதேயச் சுவரொட்டிகள் சில பல்கலைக்கழக வளாகத்துக்குள் தினங்களுக்கு முன்னர் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மாணவரிடம் குறித்த விடயம் தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.