திடீரென தீப்பிடித்த பயணிகள் பஸ் !!📷

தனியார் பயணிகள் பஸ் வண்டியொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ள நிலையில்,, பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்று அவிசாவளை, கிரிவந்தல பகுதியில் வைத்து தீப்பிடித்துள்ளது.
இச் சம்பவம் இன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பஸ் தீப் பிடித்து எரிந்த வேளை, பஸ்ஸினுள் சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில் பஸ் திடீரென தீப்பிடிப்பதை அவதானித்த பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் அவசரமாக செயற்பட்டு அனைத்துப் பயணிகளையும் பஸ்ஸினுள் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளமையால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

 ஆரம்பத்தில் பஸ்ஸின் இயந்திரப் பகுதியில் தீ பரவியுள்ளதாகவும் பின்னர் குறித்த தீ கட்டுப்பாட்டை மீறியமையால் பஸ் வண்டி முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.  குறித்த பகுதிக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Powered by Blogger.