எடப்பாடி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன – வைகோ!!

தமிழகத்தில் எடப்பாடி பழநிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


அத்துடன், திராவிட கோட்டைக்குள் பாரதிய ஜனதாவால் உள்நுழைய முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசிய பின்னர் உடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் தி.மு.க.வுக்கு 3ஆவது இடம் கிடைத்துள்ளது. தலைமை ஆளுமை என்பதை இந்த தேர்தல் மூலம் தமிழக மக்கள் நிரூபித்துள்ளார்கள். தமிழக நலன்களை தி.மு.க. காக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

திராவிட கோட்டைக்குள் பா.ஜனதாவால் நுழைய முடியவில்லை. அடுத்து முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வருவார் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் தார்மீக உரிமையை எடப்பாடி பழனிசாமி இழந்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியின் வெற்றி, ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆளும் கட்சியின் அறை கூவலுக்கு எதிராக தி.மு.க. கூட்டணியின் வெற்றியை கண்டு மற்ற மாநிலத்தவர் கூட வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

நியூட்ரினோ, மேகதாது அணை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றாத வண்ணம் தமிழகத்திற்கான அரணாக தி.மு.க. கூட்டணி இருக்கும்” என அவர் மேலும் கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.