மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும்., மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது.”!!

இந்த உலகம் உன்னுடையது அல்ல. உன் பிள்ளைகளுக்கு உரியது. கோடி கோடியாகப் பணம் சேர்த்து அவர்களுக்கு வைக்க வேண்டாம். விலை உயர்ந்த மகிழுந்துகளை (கார்) வாங்கி வைக்க வேண்டாம். வானுயர்ந்த மாளிகையை வாங்கி வைத்துவிட்டுப் போக வேண்டாம். இந்தப் பூமியை அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான ஒன்றாக விட்டுவிட்டுச் செல்லுங்கள்.


மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும்., மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது.”

ஒவ்வொரு உயிரினத்திற்குமான உயரிய தேவை, தூய குடிநீர், தூயக் காற்று, தூய சுற்றுச் சூழல்.

மரம் மண்ணின் வரம். வீசுகின்ற காற்றை மூச்சுக் காற்றாக மாற்றித் தருகின்ற அரிய பணியை மரங்கள் செய்கின்றன.
ஒரு மகிழுந்து (கார்) வெளியிடுகின்ற நச்சுப் புகையைச் சுத்தப்படுத்த 6 மரங்கள் தேவைப்படுகிறதென்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்த மரங்கள்தான் தொடர்ந்து 24 மணி நேரமும் மூச்சுக் காற்றை (ஆக்சிஜன்) வெளியிடுகிறது.

“பிறக்கும் குழந்தைக்குப் பெயரைப் பிறகு வை. பிறந்த குழந்தைக்குக் பரிசாக ஒரு மரக்கன்றை முதலில் நட்டு வை”. என்று ஊக்கப்படுத்தப்படவேண்டும் .

மரங்களும் அதன் தேவைகளும் என்ன என்பதைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வருகின்ற தலைமுறைப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் மரங்களை நேசிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நோக்கம்.

ஒவ்வொரு நபருக்கும் ஒரு மரம் என்று நட்டு வளர்த்தாலே சுத்தமான காற்று, வளமான மண் என்றாகிவிடும். நோயற்ற வாழ்வின் தொடக்கமாக இருக்கும்.

 இந்த மண்ணைக் காப்பதும், மீட்டெடுப்பதும் மண்ணின் பிள்ளைகளுக்குக் கடமையாகிறது. அதை நாம் தமிழர் கட்சி செய்து முடிக்கும்.
Powered by Blogger.