தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

நடைபெற்று முடிந்த மக்களவைத் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இணையாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டது தினகரன் தலைமையிலான அமமுக. ஆளும் கட்சியை மிரளவைக்கும் அளவுக்கு கோடிக் கணக்கில் பணத்தை கொட்டி தேர்தல் செலவுகளை செய்ததாக சொல்கிறார்கள் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள். அதுபோல தினகரன் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் குவிந்தது அமோக வரவேற்பு அளித்தது அமமுகவினருக்கு பலத்த நம்பிக்கையை தந்தது.


அமமுக வேட்பாளர்கள் வெற்றிபெறமாட்டார்கள் என்றாலும் கூட பெருவாரியான வாக்குகளைப் பெற்று திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு வந்துவிடலாம். இடைத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசைக் கவிழ்த்து வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்ற உறுதியான நம்பிக்கையோடு தமிழகம் முழுவதும் பம்பரமாகச் சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார் தினகரன்.

ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தினகரன் அப்செட்டில் இருப்பதாகக் கூறுகிறார்கள் அமமுகவினர். இதுதொடர்பாக அமமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.

வாக்கு எண்ணிக்கையன்று காலை சாமி கும்பிட்டுவிட்டு ரிசல்ட்டை தெரிந்துகொள்ள டிவி முன்பு அமர்ந்திருக்கிறார் தினகரன். துவக்கம் தொட்டே பாஜக முன்னிலையில் இருந்துவந்தது. மேலும், இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 7 இடங்களுக்கு மேல் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவந்ததாலும், அமமுக வேட்பாளர்கள் எதிர்பார்த்த வாக்குகளை விட குறைவாகவே வாங்கி வந்ததாலும் எப்போது சிறு புன்னகையுடன் இருக்கும் தினகரன் முகம் இறுக்கமாகிவிட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு டிவியை ஆப் செய்தவர் வீட்டுக்குள்ளேயே டென்ஷனாக நடப்பதும் உட்காருவதும், எழுந்து வாட்ஸ் அப் கால் பேசுவதுமாக இருந்திருக்கிறார். பெங்களூரில் உள்ள ஒருவருக்கு போன் செய்து சின்னம்மா எப்படியிருக்காங்க என்று கேட்டவர், எதிர்முனையில் பதில் கேட்டுவிட்டு, ‘கவலைப்படாம தைரியமா இருக்கச் சொல்லுங்க’ என்று கூறிவிட்டு லைனைத் துண்டித்துள்ளார். தேர்தல் முடிவுகளைப் பார்த்தவருக்கு பிரஷர் அதிகமாகி சிறிது வேர்த்ததால், குடும்ப மருத்துவர்கள் வீட்டுக்குச் சென்று பரிசோதனை செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த மாதம் கடைசியில் மருத்துவப் பரிசோதனை செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறார் தினகரன்.

தேர்தல் முடிவுகள் வந்திருக்கும் இந்நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றால் வேறுமாதிரியான வதந்திகளை உருவாக்கிவிடுவார்கள். அதனால் சில நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்யலாம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார் தினகரன்.

இதுபோலவே தேர்தல் முடிவுகளை பெங்களூரு சிறையிலிருந்து பார்த்த சசிகலாவும் சோர்வுடனே இருந்துள்ளார். சசிகலா தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இரவு முழுவதும் சரியாகத் தூங்காமல், காலையில் எழுந்து குளித்துவிட்டு இஷ்ட தேவதையை வணங்கிய பிறகு டிவிக்கு முன்பாக அமர்ந்திருக்கிறார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் ஒரு கட்டத்தில் அறைக்குச் சென்று படுத்துவிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவருக்கு பி.பி பரிசோதனையும் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள் பெங்களூரு சிறை வட்டாரங்களில்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.