நீலகிரியில் பழக்கண்காட்சி!!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவில் நடத்தப்பட்ட பழக்கண்காட்சியை பார்வையிடுவதற்கு ஆயிரக்கணக்கானோர் குடும்பங்களுடன் வருகை தந்ததாக இந்திய சுற்றுலாத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த கண்காட்சியில், ஒன்றரை டன் பழங்களைக் கொண்டு 7 அடுக்குகளில் அமைக்கப்பட்ட பழ அலங்காரமே ரசிகர்களை அதிகளவு கவர்ந்துள்ளது.

மேலும் பழங்களால் வடிவமைக்கப்பட்ட நுழைவாயில், மயில், வண்ணத்துப்பூச்சி ஆகியவற்றையும் ரசிகர்கள் அதிகளவு கண்டுகளித்துள்ளனர்.

அத்துடன் அரியவகை பழங்களான துரியன், வெல்வெட் ஆப்பிள், ரோஸ் ஆப்பிள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.