யாழில் குளத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய வாள் குழு!!

தனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மானிப்பாய் மற்றும் நவாலிப் பகுதிகளில் வைத்து அவர்கள் 9 பேரும் இன்று மாலை கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“தனு ரொக்கின் பிறந்த நாள் இன்று என்ற தகவல் அறிந்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவினர் மானிப்பாய் பகுதியில்
சிவில் உடையில் களமிறக்கப்பட்டனர்.

மானிப்பாயில் தனு ரொக்கின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு பின்பக்கமாக உள்ள குளக்கட்டுப் பகுதியில் பிறந்த நாள் கொண்டாடிய ஐந்து பேர் இன்று மாலை கைது செய்யப்பட்டனர்.
அதனையடுத்து நவாலி வயல் வெளியில் பகுதியில் வைத்து தனு ரொக்கின் மற்றொரு பகுதியினர் பிறந்த நாள் கொண்டாடிய போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தனு ரொக்கும் அடங்குவார்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு மட்டும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.அவர்கள் இருவரும் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்தனர். தனுரொக் உள்ளிட்ட சிலர்
பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.

கைது செய்யப்பட்ட 9 பேரும் விசாரணைகளுக்கு உள்படுத்தப்பட்ட பின் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார்கள்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆவா குழுவின் உறுப்பினர் மனோஜ் என்பவருடைய பிறந்த தினத்தை கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள விடுதி ஒன்றில் கொண்டாடிய போது, பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
அதன்போது பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில் ஐவர் மட்டும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1996ம் ஆண்டு பிறந்த  தனு ரொக் என்ற புனை பெயருடன் திரியும் இவன் யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவனாவான். இவனது நண்பர்களுக்கும் ஆவா குழுவுக்கும் இடையில் உள்ள முரண்பாடே தற்போது பல இடங்களிலும் வாள் வெட்டுச் சம்பவங்களாக பதிவாகி வருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.