நியூஸிலாந்திடம் நிலைகுலைந்த இந்தியா!!

இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது.

லண்டனில் நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நியூஸிலாந்தின் பந்து வீச்சில் நிலைகுலைந்து 39.2 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 179 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இந்திய அணி சார்பில் ஜடேஜா 54 ஓட்டத்தையும், பாண்டியா 30 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றதுடன், ஏனைய வீரர்கள் சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுக்களையும், டீம் சவுதி, கிரேண்ட்ஹோம், லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
 
180 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி 37.1 ஓவரை மாத்திரம் எதிர்கொண்டு 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.
நியூஸிலாந்து அணி சார்பில் ரோஷ் டெய்லர் 71 ஓட்டத்தையும், அணித் தலைவர் வில்லியம்சன் 67 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா, பாண்டியா, ஜடேஜா மற்றும் சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்களாதேஷையும், நியூஸிலந்து அணி மேற்கிந்தியத் தீவுகளையும் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.