யாழில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு!!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைத் தாண்டி வந்தமைக்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் விடுவிக்கக்கோரி குறித்த மீனவர்களின் உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை  நாளை காலை சந்தித்து மனுவொன்றை கையளிக்க உள்ளனர்.கடந்த வருடம் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து  வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் குறித்த படகு மூழ்கியது.

இந்நிலையில் படகிலிருந்த நான்கு மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து கடந்த 180 நாட்களாக யாழ்பாணம் சிறையில் வைத்தனர்.

இதையடுத்து குறித்த   4 மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி மத்திய மாநிலஅரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்து  பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் (27) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை  சந்தித்து மனுவென்றை கையளிக்க உள்ளனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள நான்கு மீனவர்களின் வழக்கு  (27) காலை 11 மணிக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.