தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கமறியல்!!


கைது செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட மொஹமட் பாரூக் மொஹமட் ஃவவாஸ் என்பவர் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டார். குறித்த நபரை இன்று (வியாழக்கிழமை) கொழும்பு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தினர். இதன்போது குறித்த நபரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.