சஹரானின் உறவினர்களைச் சந்தித்தார் முஸ்லிம் அரசியல்வாதி!


இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான சூத்திரதாரி சஹரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரை முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் நேரில் சென்று பார்வையிட முயற்சித்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த இருவரையும் பார்ப்பதற்காக அரசியல்வாதி ஒருவர் அம்பாறை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அம்பாறை வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்றும் இதன் காரணமாக குறித்த அரசியல்வாதி திருப்பிச் செல்ல நேரிட்டது என்றும் தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிஸாருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்க வைத்தனர். இதன்போது 15 பேர் உயிரிழந்திருந்தனர். இதில் சஹரானின் உறவினர்களே உயிரிழந்திருந்தனர். எனினும் அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரை காயங்களுடன் பாதுகாப்புத் தரப்பினர் மீட்டனர். அவர்கள் இருவரும் தற்போது அம்பாறை வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.