ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கோதண்டர் சிலை!!
பயணங்கள் முடிவதில்லை என்பது போன்று பெங்களூரு நோக்கிய கோதண்டராமரின் பயணம் நீண்ட நெடியதாக இருந்தது.
பெங்களுரு ஈஜிபுரா பகுதியில் கோதண்ட ராமசாமி கோயில் உள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஒருமுறை இந்த கோயிலுக்கு வந்து கோதண்டராமரை வழிபட்டனர். அப்போது, கோயிலின் முகப்பில் பிரமாண்டமான விஷ்ணு சிலை அமைக்கப்பட்டால், நன்றாக இருக்கும் என்று ஆலோசித்தனர். இதையடுத்து, கோதண்டராமருக்கு சிலை அமைக்கக் கல் தேடும் பணி தொடங்கியது. இந்தியா முழுவதும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில் இந்த பிரமாண்ட விஷ்ணு சிலை அமைக்கும் பணிக்கு கோயில்கள் நிறைந்த தமிழகத்தில் இருந்துதான் கல் கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள கொரக்கோட்டை கிராமத்தில் கிடைத்த அந்தக் கல்லில் இருந்து பிரமாண்ட சிலை அமைக்கும் பணி 2014-ம் ஆண்டு தொடங்கியது.
ராஜேந்திர ஆச்சாரி என்பவர் தலைமையில் 20 சிற்பக் கலைஞர்கள் இணைந்து விஷ்ணு சிலையை ஆண்டுக்கணக்கில் வடிவமைத்தனர். சிலை 64 அடி உயரம் கொண்டது. பீடம் 24 அடியில் அமைகிறது. 25 அடி அகலம் கொண்ட இந்தச் சிலையின் எடை 380 டன். இவ்வளவு எடை கொண்ட சிலையைத் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு கொண்டு செல்லும் பணி பெரும் சவால் நிறைந்ததாக இருந்தது. 240 டயர்கள் கொண்ட பிரமாண்ட டிரெக்கில் கடந்த நவம்பர் மாதம் 10-ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து கோதண்டராமர் சிலை பெங்களூரு நோக்கி பயணத்தைத் தொடங்கியது. வழியில் பல தடைகளைச் சந்திக்க நேரிட்டது. சில இடங்களில் கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன. அவர்களுக்கு நஷ்ட ஈடும் கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டது.
சிலையின் எடை காரணமாக லாரியின் டயர்கள் அவ்வப்போது வெடித்துவிடுவது உண்டு. டயர்கள் மாற்றப்பட்டு மீண்டும் கோதண்டராமர் பயணப்படுவார். சில இடங்களில் தனியாக சாலை அமைக்கப்பட்டு, பயணத்தைத் தொடர வேண்டியது இருந்தது. நாள் ஒன்றுக்கு 1 அல்லது 2 கிலோ மீட்டர் தொலைவுதான் லாரி செல்லும். இப்படியாக 7 மாதங்கள் பயணப்பட்டு கடைசியாக நேற்று முன்தினம் பெங்களூரு சென்று சேர்ந்த கோதண்டராமர் சிலையை பக்தர்கள் வழிபட்டுப் பரவசப்பட்டனர். கோதண்டராமர் சிலை பயணத்துக்குப் பயன்படுத்தப்பட்ட லாரிக்கு டீசல் மட்டும் 12,000 லிட்டர் தேவைப்பட்டது. லாரி வாடகை சுமார் ரூ.2 கோடி. டீசல் செலவு ரூ.7.5 லட்சம். இது தவிர இரு மாநில காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். கோதண்டராமர் சிலை நின்ற இடங்களில் எல்லாம் மக்கள் வழிபட்டு மகிழ்ந்தனர். தற்போது, ஈஜிபுரா பகுதியில் லாரி நிறுத்தப்பட்டுள்ளது. லாரியிலிருந்து சிலை இறக்கப்பட்டதும், இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறும். இதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. பிறகு, கோயிலின் முகப்பில் 24 அடி உயரப் பீடத்தில் கோதண்டராமர் சிலை நிறுவப்படும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை