மோடியால் புறக்கணிக்கப்பட்டார் ஸ்டாலின் !!

பிரதமராக மோடி இன்று இரண்டாவது முறை பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பல நாட்டுத் தலைவர்கள், இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர். தற்போது, நாடாளுமன்றத்தில் தி.மு.க-தான் மூன்றாவது பெரிய கட்சி.  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 3 பேருடன் சேர்ந்து 23 எம்.பி-க்கள் தி.மு.க வசம் உள்ளனர். அந்த வகையில், பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு தனக்கு நிச்சயம் அழைப்பு வரும் என்று ஸ்டாலின் எதிர்பார்த்தார். ஆனால், நடந்ததோ வேறு... பா.ஜ.க தரப்பு தி.மு.க தலைவரைக் கண்டுகொள்ளவே இல்லை. தற்போதைய நிலையில், ஸ்டாலினைப் புறக்கணிப்பது தமிழகத்தைப் புறக்கணிப்பது போன்றதுதான் என்று தி.மு.க வட்டாரத்தில் குமுறல்கள் வெளிப்படுகின்றன.

தி.மு.க செய்தி தொடர்பாளரும் ராஜ்யசபா எம்.பி-யுமான டி.கே.எஸ்.இளங்கோவன், ``ஸ்டாலினுக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்காகக் காத்திருக்கிறோம். எங்கள் தலைவருக்கு அழைப்பு வரவில்லை என்றால் நாங்களும் விழாவில் பங்கேற்கமாட்டோம்'' என்று தெரிவித்துள்ளார்.

மோடி பதவியேற்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு அ.தி.மு.க-வுடனான கூட்டணி ஒரு காரணமாக இருந்தாலும், மோடி மீது வெறுப்பை உமிழும் வகையில் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டது முக்கிய காரணம் என்று பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது.

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஆர்.ஸ்ரீநிவாசன் கூறுகையில், ``தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சீரமைக்கப்படும். சோஷியல் ஊடகங்களில் தி.மு.க தரப்புக்குத் தகுந்த பதிலடி தரப்படும். எங்களைப் பொறுத்தவரை ஸ்டாலின்தான் முதல் எதிரி'' என்று ஓப்பனாகவே பேசியுள்ளார். தமிழக பா.ஜ.க தரப்பு, ஸ்டாலினின் மோடி மீதான வெறுப்பு நிறைந்த பரப்புரையை மேலிடத்துக்கு போட்டுக் கொடுத்து தி.மு.க தலைவருக்கு அழைப்பு விடுக்காமல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சித் தலைவரான தனக்கு அழைப்பு வருமென்று காத்திருந்த ஸ்டாலினுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஸ்டாலினைவிட மோடியைக் கடுமையாக விமர்சித்தவர், திரிணாமுல் தலைவர் மம்தா. அவரைக்கூட பிரதமர் பதவியேற்பு விழாவுக்குப் பா.ஜ.க அழைத்துள்ளது. மம்தாவை ஒப்பிடுகையில் ஸ்டாலின் பெரிய அளவில் பிரதமரை விமர்சிக்கவில்லை. எனினும், பா.ஜ.க மேலிடம் தனக்கு அழைப்பு விடுக்காதது தன்னைப் புறக்கணிப்பது போன்றதாகவே தி.மு.க தலைவர் கருதுவதாக சொல்லப்படுகிறது. 

விஜயவாடாவில் இன்று  நடைபெற்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.