ட்விட்டர் டிரெண்டில் முதலிடத்தைப் பிடித்த ஹேஷ்டேக்!!
ப்ரண்ட்ஸ்’படத்தில் நடிகர் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தின் தலையில் சுத்தியல் விழும் காட்சியை மையமாகக் கொண்டு சமூகவலைதளத்தில் மீம்ஸ்கள் சுற்றிவந்தன. இந்த மீம்ஸ்கள் ட்விட்டரில் #pray_for_nesamani என்ற ஹேஷ்டேக்குடன் வைரலாகிவருகிறது.
இந்த ஹேஷ்டேக் வைரலாக ட்விட்டர் டிரெண்டில் முதலிடத்தைப் பிடித்தது. `ப்ரண்ட்ஸ்' படம் மலையாளப் படத்தின் ரீமேக். தமிழில் இந்தப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் வடிவேல் நடித்திருப்பார். ஒரிஜினல் வெர்ஷனில் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தில் ஜகதி ஸ்ரீகுமார் நடித்திருப்பார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் செக்கஞ்சம்பரம்பில் லாசர் (Chackachamparambil Lasar). வடிவேலுவின் கதாபாத்திரம் ட்ரெண்டாக, தற்போது மலையாள ரசிகர்கள் #Pray_For_LasarElayappan என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறார்கள். அதில் ``நேசமணிக்கு ஏற்பட்டது போன்ற ஒரு சம்பவம் கேரளாவைச் சேர்ந்த கான்ட்ராக்டரான லாசர் எலயப்பன் என்பவருக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் நேசமணிக்கு ஆதரவு தருகிறோம். அதேபோல் எங்கள் லாசருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். உலகின் பல பகுதிகளில் வசிக்கும் மலையாளிகள் லாசருக்கு உதவவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளனர்.
இந்த ஹேஷ்டேக்கும் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க வெற்றிபெறவில்லை. இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பிரதமர் மோடி இன்று பதவியேற்கிறார். அவரை வாழ்த்தும் விதமாக அவரது ஆதரவாளர்கள் #ModiSarkar2 மற்றும் #ModiSwearingIn போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கினர். இதில் ட்விட்டரில் டிரெண்டாகி வந்த வேளையில்தான் #pray_for_nesamani ஹேஷ்டேக் தமிழர்களால் டிரெண்ட் ஆனது. இந்தநிலையில் கேரளத்திலிருந்து லாசருக்கு பிரார்த்தனை செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக் ரெடியாகி வருகிறது. இது என்ன டிசைனோ என்னவோ!...
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை