மோடியின் பதவியேற்பு விழா – தி.மு.க உறுப்பினர்கள் புறக்கணிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிற்கு அழைப்பு விடுக்கப்படாதமையால், அக்கட்சியின் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அத்துடன் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தால் மட்டுமே நாங்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்போம் என தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க நிர்வாகிகள், மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரங்களின் போது மோடிக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டார் எனவும், இதன்காரணமாக கட்சியின் மேலிடம் கவலையடைந்துள்ளது எனவும்  தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லிக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.