இராணுவத்திற்கு அடிபணிந்து வாழும் ஓர் அசிங்கமான வழிமுறையை தமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பவர்கள் தமிழர்கள் அல்ல,மாறாக கேடுகெட்டவரே!!

நாட்டையும்,நாமிருக்கும் வீட்டையும் காப்பது வெறுமனே இராணுவ வீரர்கள் மட்டும் கிடையாது,சில நாய்களும் கூடவே என்பதை எம்மில் சில தமிழருக்கு இது இன்னும் தெரியாதுபோல் உள்ளது.இராணுவத்தின் கடமைக்கு கிடைக்கிறது அவர் கை நிறைய சம்பளம்,நாட்டை காக்கும் பணிக்காகவே அது வழங்கப்படுகின்றது.

தமது சொந்த வருமானத்திற்காய் படையில் இணைந்தவர்க்கு எதற்காக எமது மாணவர்களை அவர் பாதம்தொடவைத்து நாம் அழகுபார்க்கவேண்டும்?...

இது படையினரின் வேண்டுகோளாக மாணவர்களுக்கு விடப்பட்டு,கட்டாயமாக நடத்தப்பட்ட ஒரு அநாகரீகமான செயலா?..என்பதை எமது தமிழ் சமூகத்தின் பெரியவர்கள் உடனடியாக இவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும் என்பதை இங்கே வலியுறுத்தி கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

மானமற்ற தமிழர்களே,உங்கள் எதிர்காலத்தை இராணுவத்தின் கால்களில் விழவைத்து நீங்களே அவற்றை அழிக்கலாமா?...

Powered by Blogger.