படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனுக்கு யாழில் நினைவஞ்சலி!

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம்  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.


யாழ்.நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அருகில் இந் நிகழ்வு நடைபெற்றது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை மாலை 4.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ம் ஆண்டு  மே 31ம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.No comments

Powered by Blogger.