முன்னணி நடிகர்களைவிட நேசமணிக்குதான் அதிக ஆஃபர்!!

கடந்த 2 நாள்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் அடித்திருக்கிறது #prayforneasamani ஹேஷ்டேக். ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டரிலும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறார் கான்ட்ராக்டர் நேசமணி.
இந்த நிலையில், பனியனுக்குப் பெயர் பெற்ற திருப்பூரில், நேசமணியின் உருவம் பதித்த டி-சர்ட்களை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர் 2 இளம் தொழில் முனைவோர்கள்.

திருப்பூரில் இயங்கி வரும் வீகா பனியன் நிறுவனத்தின் உரிமையாளர்களான இவர்கள், நேற்றைய தினம் இணையத்தில் நேசமணி ஹேஷ்டேக் வைரலாகத் தொடங்கியபோதே, தங்களது நிறுவனத்தில் நேசமணியின் உருவப்படம் பதித்த டி-சர்ட்களை தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதையடுத்து, தயாரான டி-சர்ட்களை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட, எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் ஆர்டர்கள் குவியத் தொடங்கியிருக்கிறது. தற்போது மும்முரமாக டி-சர்ட்களை பார்சல் அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவர்களை சந்தித்துப் பேசினோம்.


நம்மிடம் பேசிய பனியன் நிறுவனத்தின் உரிமையாளர் விமல், `` நானும் என் நண்பர் நூதன் ராமும் சேர்ந்துதான் இந்த டி-சர்ட்களை உருவாக்கினோம். கடந்த சில வருடங்களாகவே பிரத்யேக பின்னலாடைகளைத் தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்துவருகிறோம். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்களின் திரைப்படப் போஸ்டர் டிசைன்களை பிரத்யேகமாக உருவாக்கி, அதை டி-சர்ட்களில் பிரின்ட் செய்து விற்பனை செய்து வந்தோம். அதேபோலத்தான் நேற்றைய தினம் வைரலான, நேசமணியின் உருவம் தாங்கிய டிசைன்களையும் தயாரித்தோம். ஆனால், முன்னணி நடிகர்களின் உருவம் பதித்த டி-சர்ட்களைவிட, `கான்ட்ராக்டர் நேசமணியின்' உருவம் பதித்த டி-சர்ட்கள்தான் அமோகமாக விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து ஆர்டர்கள் வந்த வண்ணம் இருப்பதால், அதிகநேரம் உழைத்து நேசமணி டி-சர்ட்களை தயாரித்து அனுப்பிக்கொண்டு இருக்கிறோம்” என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.