மிகவும் அசாதாரண சூழ்நிலையிலும் இலங்கையில் தரையிறங்கிய வெளிநாட்டவர்கள்.!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் பெருமளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலினால் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இவ்வாறான சூழ்நிலையில், 52 ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.ரஷ்ய விமான சேவைக்கு சொந்தமான எஸ்.யூ 6265 ரக விமானம் ஒன்றின் ஊடாக அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.இலங்கைக்கு வருகை தந்தமை குறித்து சுற்றுலா பயணிகள் கருத்து வெளியிட்டனர்.இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ரஷ்யாவிற்கு தகவல் கிடைத்தது. எனினும், நாங்கள் அச்சப்படவில்லை. திட்டமிட்ட முறையில் இந்த சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ளோம். 12 நாட்கள் தங்கியிருப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். இலங்கையிலுள்ள பல இடங்களை பார்வையிட திட்டமிட்டுள்ளோம்’ எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

No comments

Powered by Blogger.