யாழ். பல்கலைக்கழகத்தில் தேடுதல் வேட்டை !!


யாழ். பல்கலைக்கழகத்தில் இரானுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாரிய சோதனைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இத் தேடுதல் நடவடிக்கையின்போது செய்தி கேரிப்பதற்கு பல்கலைக்கழகத்திற்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இடைநிறுத்தப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலையே இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் உள்ளிட்ட அனைத்து பீடங்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ விடுதி உள்ளிட்ட பல்கலைக்கழக விடுதிகள் அனைத்தும் சுற்றி வைளக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோன்று கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவத்துறையும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பல்கலைக்கழகம் முற்று முழுதாக சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுவதால் பணிகளுக்கு வந்த பலரும் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ள அதேவேளை, விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து நாடு முழுவதும் பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.
Powered by Blogger.