மோடிக்கு எதிராக களமிறங்கிய பிரபல ராணுவ வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு!!

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக களம் இறங்கிய பிரபல ராணுவ வீரரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது.  இதில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.  வரும் மே 19ம் தேதி நடைபெறும்  ஏழாம்  கட்ட தேர்தலில் இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெற இருக்கிறது.
இந்த தொகுதியில் தேஜ் பகதூர் யாதவ் என்கிற முன்னாள் ராணு வீரர் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.  இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர்.
எல்லைப் பகுதியில் காவல் பணியில் இருக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில்  இருப்பதாகவும் அதனால்  இரவில் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்றும் குற்றம் சாட்டி இவர் வெளியிட்ட வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் சமீபத்தில் வைரலானது.
ஆதாரமற்ற புகார்களை கூறியதாக தேஜ் பகதூர் யாதவ் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய வேளையில் தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக அறிவித்தார். 
மேலும்,” ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால்,  மோடி அரசு என்னை பணி நீக்கம் செய்தது.  பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான் என் லட்சியம். அதற்காகவே மோடியை எதிர்த்து போட்டியிடப்போகிறேன்”  என்றார்.
இந்த நிலையில், அவரை தனது கட்சி சார்பாக போட்டியிடும்படி சமாஜ்வாடி கட்சி கேட்டுக்கொண்டது.இதை ஏற்ற தேஜ் பகதூர் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்ய  இறுதிநாளான ஏப்ரல் 29ந்தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஆனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளதாக வாரணாசி தேர்தல் அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தேஜ் பகதூர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, “எனது வேட்பு மனுவை வேண்டுமென்றே நிராகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.   நேற்று மாலை 6.15 மணியளவில் சில ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி  என்னிடம் தேர்தல் அதிகாரிகள் கேட்டார்கள். நானும்  அவற்றைச் சமர்ப்பித்து விட்டேன். ஆனாலும் எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.