வீழமாட்டோம் விடவும்மாட்டோம் கைதாகிய மாணவர்களுக்காக இளஞ்சட்டத்தரணிகள் களத்தில்!!

இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் வழக்கில் கலாநிதி குருபரன் அவர்களின் தலைமையில் சட்டத்தரணி திரு. சுகாஸ், விஸ்வலிங்கம் மணிவண்ணன், விஸ்வலிங்கம் திருக்குமாரன்,திரு வினேராஜ்  மற்றும் திரு.சயந்தன் திரு. செலஸ்ரின் அகியோர் முன்னிலை  ஆகினார் .
இதில்  சட்டத்தரணி கலாநிதி குருபரன் அவர்கள் மிகவும் சிறப்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட முறையில் பிழை இருப்பதையும் சுட்டிக்காட்டி பொஸிஸ் அத்தியச்சகர் அல்லது அவரின் நிலைக்கு மேல்நிலை அதிகரி ஒருவரால் தான் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியும் என்பதை சுட்டிக்காட்டி வழக்கு தாக்கல் செய்த முறை பிழைஎன்பதை நீதி மன்றத்தில் தெரிவித்தார். சட்டத்தரணி சயந்தன் அவர்கள் சட்டமா அதிபர் அவர்களினால் தான் பினணவழங்க முடியும் இல்லை என்றால் நீதிபதி தான் திருப்தி அடைந்தால் வழங்கமுடியும் என்று நீதிபதிக்கு எடுத்து கூறினார். பொலீசார் பிணை வழங்க ஆட்சேபனை செய்தனர். பின்னர்  வருகின்ற 08 ம் திகதிக்கு பிணை வழங்குவதா என்பது தொடர்பில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.