தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறியது ராஜஸ்தான்!

ஐ.பி.எல் தொடரின் 53ஆவது போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான குறித்த போட்டி நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அந்த அணி சார்பில் ரியான் பராக் மாத்திரம் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்ததுடன் ஏனைய வீரர்கள் சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா மற்றும் அமித் மிஷ்ரா தலா 3 விக்கெட்டுக்களையும், டிரென்ட் பொல்ட் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இந்தநிலையில் 116 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய டெல்லி அணி 16.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. இந்த தோல்வியுடன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.