கிழக்கு பல்கலைக்கழக பகுதியில் விசேட அதிரடிப்படை குவிப்பு!-
கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பலத்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது விசேட அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் அதிகளவான விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இன்று (திங்கட்கிழமை) சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழத்திலும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கிழக்கு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியிலும் தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவிவருவதுடன் மக்களும் பீதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் பொலிஸார், இராணுவம் என பாதுகாப்பு படையினர் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை