சீரடி சாயிபாபா மூட்டிய நெருப்பு: நோய்களை போக்கும் உதியின் ரகசியம் இதுதான்!?

சாயி பாபா துவாரகாமாயியில் வசித்த பொழுது தனக்கு வந்த தட்சணையைப் பணத்தை இல்லாதவர்களுக்குக் கொடுத்தது போக மீதம் உள்ள பணத்தில் காய்ந்த விறகு கட்டைகளை வாங்குவார்.
அந்த கட்டைகளை வைத்து தன் முன்னால் தீயை வளர்த்து வந்தார். ஹோம குண்டத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு போல் அது இருபத்து நான்கு மணி நேரமும் எரிந்து கொண்டிருந்தது. அதற்கு துனீ என்ற  பெயர்.
sai baba
அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை உதி என்று கூறுவார்கள். தமிழில் சாம்பல் அல்லது விபூதி என்று  அர்த்தம். மசூதியில் பாபாவை  சந்திக்கச் செல்லும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் பாபா  பிரசாதமாக உதியை கை நிறையக் கொடுப்பார். அவர் அன்று ஏற்றி வைத்த அந்த அணையா நெருப்பு இன்றும் துவாரகாமாயியில்  அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் உதி தான்  அன்றும், இன்றும்  பாபாவின் பிரசாதமாகக் கருதப்படுகிறது. இந்த உதீ உடல் பிணிகளையும் உள்ளப் பிணிகளையும் போக்க வல்ல அருமருந்தாகப் பாபாவின் பக்தர்களால் போற்றி பாதுகாக்கப்பட்டும், உபயோகப்படுத்தப்பட்டும் வருகிறது.
உதியை பாபா எந்தக் காரணத்துக்காகக் கொடுத்தார்? 
sai
மனித உடல் பஞ்ச பூதங்களினால் உண்டான ஒரு உருவம்.  சுக துக்கங்களை அனுபவிப்பதற்காகவே வாழ்கிறது. அனுபவம் முடிந்தவுடன் பொத்தென்று ஒரு நாள் கீழே விழுகிறது. சாம்பலாக்கப்படுகிறது. இதை ஞாபகப்படுத்தவே பாபா உதீயை பக்தர்களுக்கு அளித்தார். உருவமும் பெயரும் உள்ள பொருள் எதுவாக இருந்தாலும் கடைசியில் மண்ணாகத் தான் ஆக வேண்டும் என்பதை உணர்த்தவே உதீயை பிரசாதமாக அளித்து வந்துள்ளார் பாபா. 
உடல் பிணிகளை உதீ போக்குமா?
udhi
உதீயை தினமும் நம் நெற்றியில் இட்டுக்கொள்வதால், நீரில் கரைத்து அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் அநேகம். பாபா வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி இன்றும் கூட நம் உடல் பிணிகளைப் போக்கும் அருமருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது.
udhi
பாபா வாழ்ந்த காலத்தில் கஷ்டமில்லாத சுகப் பிரசவத்திற்கு, காக்காய் வலிப்பு நோய் , தேள் கடி, , எலும்பில் ஏற்பட்ட ஒரு விதநோய், டைபாய்டு ஜுரம், சிறுநீரக் கற்களைக் கரைக்க இப்படி எண்ணற்ற வியாதிகள் குணப்படுத்தப்பட்டன.
lendi udhi
அதனால் தான்  சீரடியின் லெண்டி தோட்டத்திற்கு வெளியே உதீ பிரசாதத்தை ஒரு சிறிய அறையின் ஜன்னல் வழியாக இன்றும்  விநியோகித்து வருகிறார்கள். காலையில் 6.00 மணி முதல் 11.30 மணி வரையிலும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரையும், இரவு 7 மணி முதல் 10.00 மணி வரை, உதீ விநியோகிக்கப்படுகிறது. 
'மனதாலும் ஆன்மாவினாலும் என்னிடம் நம்பிக்கை வைத்து, சுயநலமற்று என்னைப் பிரார்த்தித்தால், உங்கள் வாழ்வு சிறப்படையும். எல்லோருக்கும் நெருக்கமானவன் நான்' இது பாபாவின் கூற்று. பாபாவை நம்பிக்கையுடன் வணங்குங்கள். குறைவற்ற வளங்களைப் பெறுங்கள். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.