அட்சய திருதியையின் கதை! அன்று தங்கம் வாங்கியே ஆகவேண்டுமா?

இந்துமத நம்பிக்கைகளில் வளர்பிறைக்கு ஒரு முக்கிய இடமுண்டு.சித்திரை மாத வளர்பிறையின் மூன்றாம் திதியை வருடப்பிறப்பாகவும்,ஆவணி மாத வளர்பிறையின் பத்தாம் திதியை விஜயதசமியாகவும்,கொண்டாடுவது போல வைகாசி மாத வளர்பிறையின் மூன்றாம் திதியை அட்சய திரிதியையாக கொண்டாடுகிறார்கள்.இதை ' வைகாசி சுக்கில பட்ச மூன்றாம் திதி என்கின்றன.

இந்த நாளில் பல நற்காரியங்கள் நிகழ்ந்ததாக இந்து புராணங்கள் சொல்கின்றன.இந்துக்களைப் போலவே சமனர்களுக்கும் இது முக்கியமான நாள்.இவையெல்லாம் நிகழ்ந்தது ஒரு அட்சய திரிதியை நாளில்தான் தெரியுமா?
மகாபாரதம்

  • விநாயகக் கடவுளும் வியாசரும் மகாபாரதத்தை எழுதத் துவங்கிய நாள்.

  • பெருமாளின் ஆறாவது அவதாரமான பரசுராமன் பிறந்தநாள்

  • அன்னபூரணியின் பிறந்ததினம்.

 
  • கிருஷணன்,குசேலன் கொடுத்த அவலை தின்று அவனை செல்வந்தன் ஆக்கிய நாள்.

  • பாண்டவர்கள் 14 ஆண்டுகால வனவாசம் புறப்பட்ட போது,அவர்களுக்கு அள்ள அள்ள உணவை தரும் அட்சயபாத்திரத்தை கண்ணன் கொடுத்தது இந்த திதியில்தான்.

  • பகீரதன் கடும் தவம் செய்து தேவலோக நதியான கங்கையை பூமிக்கு கொணர்ந்த நாள்.

  • லட்சுமியை நோக்கி தவம் செய்த குபேரன்,தேவலோக செல்வங்களின் பொறுப்பாளன் ஆனதினம்.

  • சமணர்களின் முதல் தீர்த்தங்கரர் ஆதிதேவரின் நினைவுநாள்.
அட்சய பாத்திரம்
அட்சய திருதியைல் நடக்கும் செயல்கள்...வைணவர்கள் விரதமிருந்து விஷ்ணுவை பூஜித்து,அரிசி,பழங்கள், உப்பு,நெய்,காய்கறித், புதுத்துணி போன்றவற்றை ஏழைகளுக்கு வழங்குவார்கள்.
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் இன்றுதான் புது ஏர் பூட்டி,விதைப்பைத் துவங்குவார்கள்வியாபாரிகள்,லட்சுமியையும் கண்பதியையும் வணங்கி தங்களது புதுவருடக் கணக்கை தொடங்குவார்கள்.
செல்வமும் அதிர்ஷ்டமும் வாய்க்கும் என்பதால் இன்று மக்கள் தங்கம் வாங்குவர்.நீண்டபயணம்,திருமணம் ஆகிவறை திட்டமிடுவார்கள்.கங்கை,காவிரி போன்ற புண்ணிய நதிகளுக்கு சென்று நீராடுவர்.சமணர்கள் (ஜெயின்) விரதம் முடித்து கரும்புச் சாறு குடிப்பார்கள்.தியாணம்,பூஜை,பஜனை ஆகியவை அட்சயதிதியில் ஒழுங்கு செய்யப்படும்அட்சயதிரிதியை அன்று பெருமாளுக்கு சந்தனக் காப்புச் செய்தால்,அவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் .
தங்கநகை
அட்சய திருதியை அன்று,07.5.2029
சூரிய உதயம் 05.54
அஸ்தமனம்    06.53
அட்சயதிரிதியை துவக்கம் அதிகாலை 03.18
அட்சயதிரிதியை நிறைவு 08.5.2019 அதிகாலை 02.17
அட்சயதிரிதியை பூஜை முகூர்த்த நேரம் காலை 05.54 முதல் பிறபகல் 12.23 வரை.

No comments

Powered by Blogger.