வெளியானது இளவரசர் ஹரியின் மகனது ஒளிப்படம் !(படங்கள்)


அரச குடும்பத்தின் புதிய வரவான இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கிள் ஆகியோருக்கு பிறந்த ஆண்குழந்தையின் ஒளிப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரி இளவரசி மேகனுக்கு பிறந்த  அழகான ஆண் குழந்தை.(குழந்தையின் அழகான புகைப்படம் இன்று வெளியிடப்பட்டது.பிரித்தானிய இளவரசி மேகனுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு 'ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அரண்மனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது )
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் மார்க்கல் தம்பதியருக்கு நேற்று முன்தினம் (06/05/2019 திங்கட்கிழமை) ஆண் குழந்தை பிறந்தது.ஹரி–மேகன் தம்பதியரின் வாரிசு அரச குடும்பத்தின் அரியணைக்குரிய ஏழாவது வாரிசாகும்.பிரித்தானிய அரச குடும்பத்தின் புதிய ஆண் வாரிசுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.இந்நிலையில் வில்லியம்- கேட் தம்பதியினர் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஹரி – மேகன் எந்தளவிற்கு மகிழ்ச்சியில் இருக்கிறார்களோ அதே அளவு மகிழ்ச்சியில் தான் நாங்களும் இருக்கிறோம் எனவும் வில்லியம் – கேட் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர்.பிரித்தானிய அரச குடும்பத்தின் புதிய வாரிசின் பிறப்புக் குறித்து அறிந்து மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாக அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமா தெரிவித்தார்.பிரதமர் தெரேசா மே மற்றும் தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் ஆகியோரும் அரச தம்பதியருக்கு தமது வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன்,அமெரிக்காவின் பிரபலங்கள் மற்றும் புகழ்பூத்த நட்சத்திரங்களும் ஹரி – மேகன் தம்பதியருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.அரச குடும்பத்தின் புதிய ஆண் வாரிசுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.பிரித்தானிய இளவரசி மேகனுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு 'ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அரண்மனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று குழந்தையை வெளியுலகுக்கு இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அறிமுகப்படுத்தினார்.

குழந்தையின் பிறப்பு தங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் மேகன் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #ColomboPowered by Blogger.