முள்ளந்தன்டு நாற்கால்யில் விஜய் வருகை கலக்கத்தில் படக்குழு!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் படத்தின் கதையை யூகிக்கும்படியான புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.


பெண்களுக்கான கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, விவேக், கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.பிரம்மாண்டமாக ஒரு விளையாட்டு அரங்கை உருவாக்கி படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஏற்கெனவே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது சில படங்கள் வெளியாகியுள்ளன. அதில் விஜய் வீல் சேரில் அமர்ந்தபடி உள்ளார். அவரது கழுத்தில் கட்டு போடப்பட்டுள்ளது. உடல் முழுவதும் காயமடைந்த நிலையில் தான் பயிற்றுவித்த வீராங்கனைகளின் ஆட்டத்தை அவர் பார்க்கும் வகையில் காட்சி இருக்கலாம் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்துதெரிவித்துவருகின்றனர். மேலும் போட்டிக்கான வெற்றிக்கோப்பை இருக்கும் படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

பல்வேறு சோதனைகளுக்குப் பின்னரே பலரும் படப்பிடிப்பு தளத்தில் அனுமதிக்கப்படும் நிலையில் மீண்டும் புகைப்படங்கள் வெளியாவதால் படக்குழு கலக்கத்தில் உள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.