யாழில் கதி கலங்கும் ஆவா குழு!! 

நீண்டகாலமாகப் பாவனையின்றிக் காணப்படும் இளவாலை முள்ளானை கனகசபை வித்தியாலய வளவுக்குள் இருந்து நேற்றிரவு மூன்று வாள்கள், துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் மகஸின் என்பன இளவாலைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. முள்ளானை இராணுவ முகாமுக்கு மக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து இராணுவத்தினர் இது தொடர்பில் இளவாலைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர். நேற்றிரவு 10 மணியளவில் அங்கு வந்த இளவாலைப் பொலிஸார் சாக்கு ஒன்றில் சுற்றப்பட்டிருந்த நிலையில் மூன்று வாள்களையும் துப்பாக்கி மகஸின்கள் இரண்டையும் மீட்டுச் சென்றனர். குறித்த வாள்கள் ஆவா குழுவினரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் படையினர், பொலிசார் தற்போது மேற்கொள்ளும் தேடுதல் நடவடிக்கையால் இவற்றை அவர்கள் எறிந்துவி்ட்டுச் சென்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
Powered by Blogger.